பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, கண்டியிலிருந்து கொழும்பு வரை பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
”சர்வாதிகார நண்பர்களை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில், ஐ.தே.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. கண்டி – கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், கெடம்பே மைதானத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமானது.
டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். பலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.
இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த வர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரனை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது,
வெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையிலிருந்து தப்பிக்க சிலர் தீ வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று இரவு நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னைநாள் உடுவில் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனின் தாயாருமான அமரர் தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களின் ஈமைக்கிரியைகள்
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.