முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்குட்பட்ட புதிய கொலனி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் சந்தனமேரி. கணவர் யுத்த நடவடிக்கை காரணமாக வலுவிழந்தவராக, எந்தவிதமான வேலைகளும் செய்யமுடியாதவராக வாழ்ந்து வருகிறார். பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.

சந்தனமேரி அவர்கள் தினமும், சிற்றுண்டி வகைகளை தயாரித்து விற்பனை செய்து கிடைக்கக்கூடிய பணத்தைக் கொண்டே குடும்பத்தின் நாளாந்த செலவுகள், கல்வி செலவுகள் என்பன ஈடுகட்டப்படுகின்றது. போதியளவு முதலீடு இல்லாத நிலையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. மூன்று வேளை உணவு என்பதுகூட நிச்சயமற்றுக் காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில், தொழில் நடவடிக்கையை விருத்தி செய்து, விற்பனயை அதிகரிப்பதன் மூலம் நாளாந்த வருமானத்தை அதிகரிக்கலாம் எனும் அப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று, சுவிஸில் வதியும் புளொட் உறுப்பினர் தீபன் வழங்கிய நிதி ரூ 15,000/- அக் குடும்பத்துக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வுதவியை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் நிதிப்பொறுப்பாளரும் வடமாகாணசபையின் அமைச்சருமான க.சிவநேசன் (பவன்) அவர்கள் தனது மாங்குளம் அலுவலகத்தில் வைத்து 08.03.2018 அன்று வழங்கி வைத்திருந்தார்.