Header image alt text

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், தொலைபேசி மூலம், இரண்டு முறை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாட்டின் நிலைமை தொடர்பில், இதன்போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில், ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்படுத்த, அமைச்சர்கள் பலர் முயற்சித்திருந்தனர்.

ரயில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக, வீதிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் புதிய திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்; நேர குறிப்பு பலகைகளை, ரயில் பாதுகாப்பு கடவைகளுக்கு அருகாமையில் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று முதல் நாவின்ன, மஹரகம பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் நேற்று ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானத்தில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர் எனவும், ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் அங்கிருந்து கிடைக்கும்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

நேபாளம், காத்மண்டு, திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

67 பயணிகள் உள்ளிட்ட 78 பேருடன் தரையிறங்கிய யுஸ் பங்ளா என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் பங்களாதேஷில் இருந்து திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தை நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் பேஸ்புக் ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவினரால் பல்லேகல பகுதியில் 18வயதான அந்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையானது அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

நியூயோர்க் நகரிலுள்ள கிழக்கு ஆற்றுக்கு அருகில் ஹெலிகொப்டரொன்று தரையிறங்க முற்பட்ட போது நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இது வரையில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

இந்தக் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான வேளையில் 6 பயணிகளும், விமானியொருவரும் பயணித்துள்ளனர். இந்நிலையில் விபத்தின்போது ஐந்து பேர் பலியாகியுள்ளனர். விமானி ஒருவாறு உயிர் பிழைத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது மதம் சார்ந்த தாக்குதல் அல்ல.

ஒரு சமூகம் சந்தித்த மிருகத்தனமான சம்பவங்களின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது என்று முன்னாள் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். கண்டியில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினத்தவரை சட்டம் பாதுகாக்கவில்லை. நாளை, இதே நிலை பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட 8 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என்றும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். Read more