காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் போனோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், காணாமல் போனோரது உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் சந்திப்பினை நடத்தினர். இதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர், கலாரஞ்சனி இதனைக் கூறினார். Read more
ரஷ்யாவில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா ஹற்றனை அண்மித்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்றுமாலை 5 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கையின் கடற்தொழில் திட்டங்களுக்கு, நியூசிலாந்து முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 
கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றினூடாக ஆட்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு குறித்த வெலின் கப்பலும் வாகனங்களும் மூழ்கடிக்கப்பட்டதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.கே.பி.உதயங்க தெரிவித்தார்.
இலங்கையில் இன்னமும் நில அபகரிப்புகள் தொடருமாயின், நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது என, ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.