யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதுடைய நல்லதம்பி தேவகி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 76வயதான நல்லதம்பி செல்லம்மா படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.