புளொட் அமைப்பின் 29வது வீரமக்கள் தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் ஏற்பாட்டில் கடந்த 21.07.2018 சனிக்கிழமை அன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரை ஆகுதியாக்கிய கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கிளைத்தலைவர் போல் சத்தியநேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில், Read more
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஐக்கிய நாடுகளின் விசேட தூதுக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் ஆசிரிய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பகல் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்தே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மாணவர்கள் கொழும்பில் இன்று முன்னெடுத்த பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மகாபொல புலமைப்பரிசிலை 1,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும் விரிவுரையாளர்களின் வெற்றிடத்தை நிரப்புமாறு கோரியும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் நலன் சார்ந்துச் செயற்படுத்துவதைத் தடுக்க, சுற்றாடல் அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா மேற்கொண்ட முயற்சியைக் கண்டிப்பதாக, ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
காங்கேசன்துறை மற்றும் கல்முனை பகுதிகளில் இருந்து கடந்த மாதத்தில் கடலுக்கு சென்று காணாமல்போயுள்ள மீன்பிடிப் படகுகளை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 4,000 பட்டதாரிகளை பொதுச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.