 புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்தார்.
புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்தார். 
இந்த விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் திரு. த.யுகேஸ் மற்றும் ஆசிரியைகளுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் அவர் மேற்கொண்டிருந்தார். இதன்போது பாடசாலையின் அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அதிபரும், ஆசிரியைகளும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். Read more
 
		     இலங்கை அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை சம்பந்தமான தகவல்களை வெளியிடாமையால் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இயன் பைஸ்லி, சுயாதீன உறுப்பினராக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை சம்பந்தமான தகவல்களை வெளியிடாமையால் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இயன் பைஸ்லி, சுயாதீன உறுப்பினராக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு, ஆளுங்க்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்நாட்டு மக்கள் பூரண ஆதரவை தருவார்களென சீன கம்யூனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் க்வா யேஜு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு, ஆளுங்க்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்நாட்டு மக்கள் பூரண ஆதரவை தருவார்களென சீன கம்யூனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் க்வா யேஜு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் முழுமையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக புலம்பெயர் வாழ் இலங்கை பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
வட மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் முழுமையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக புலம்பெயர் வாழ் இலங்கை பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக, வைத்திய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக, கொழும்பு தேசியை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக, வைத்திய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக, கொழும்பு தேசியை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.  தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர், கடந்த மூன்று வருடங்களில், பொலிஸாருக்கு எதிராக, 89 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர், கடந்த மூன்று வருடங்களில், பொலிஸாருக்கு எதிராக, 89 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் மேற்கொள்ளப்படுமாயின், உடனடியாக அறிவிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் மேற்கொள்ளப்படுமாயின், உடனடியாக அறிவிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  நாட்டில் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தொடர்ந்து அதனை பாவனைக்கு உட்படுத்தி வருவதன் காரணமாக, தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சுற்றிவளைக்கும் செயற்பாட்டை பொலிஸாருக்கு ஒப்படைக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
நாட்டில் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தொடர்ந்து அதனை பாவனைக்கு உட்படுத்தி வருவதன் காரணமாக, தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சுற்றிவளைக்கும் செயற்பாட்டை பொலிஸாருக்கு ஒப்படைக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.  மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சார துண்டிப்பு நடவடிக்கையை கண்டித்து மன்னாரில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சார துண்டிப்பு நடவடிக்கையை கண்டித்து மன்னாரில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.  வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயிருந்தனர்.
வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயிருந்தனர்.