முல்லைத்தீவு ரூனெயளர் நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் மேலும் 8 மீனவ படகுகளும் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.பின்னர் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வழங்கிய உறுதிமொழியை அடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது 8 மீன் வாடிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டது.

இதனால் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் முற்றாக சேதமடைந்தன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.