கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டி சவாரி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டு நிகழ்வு நேற்று கிளிநொச்சி பூநகரி நல்லூரில் அமைந்துள்ள சவாரி திடலில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் பலரும் ஆர்வத்துடன் பங்கு கொண்டிருந்தனர். இந்த விளையாட்டினை பூநகரி சவாரி சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.