யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தை மறுசீரமைத்து மீள இயக்கும் பணிகள் இன்றுமுற்பகல் 10.30மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேல் மயிலிட்டி துறைமுகம் பங்களிப்பு செய்திருந்தது. இந்நிலையில், யுத்தம் காரணமாக செயழிலந்த இந்தத் துறைமுகத்தை மீளச் செயற்படுத்தும் பணிகள் 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதீட்டிலிருந்து 40கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டு இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more
அனைத்து இனங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் மூன்று மொழிகளையும் கல்வி கற்பதற்கான பாடசாலை ஒன்றை கொழும்பு மாவட்டத்தில் அமைப்பதற்கு யோசனை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
53 வருடங்களுக்கு முன்னர் பல இன மக்களின் மாணவர்கள் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலத்தில் மீண்டும் அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஒன்றிணைந்து, உயிரியல் தொழிநுட்ப ஆய்வகமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளன.