இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் பிரவேசிக்கின்ற ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்று, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் 132 இலங்கை ஏதிலிகளை ஏற்றிய படகு ஒன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் வழியில் இடைநிறுத்தப்பட்டது. இந்தோனேசியாவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு காத்திருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், மானஸ்தீவில் உள்ள 20 ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டி அவர்களை அவுஸ்திரேலிய மண்ணிற்கு அழைத்துவருது மிகப்பெரிய ஆபத்தான தீர்மானமாகும். அவர்களுக்கு இரக்கம் காட்டினால் மீண்டும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஏதிலிகள் அவுஸ்திரேலியா நோக்கி பிரவேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் மேலும் கூறியுள்ளார்