சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.

தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அங்கு தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.