Header image alt text

முல்லைத்தீவில், மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினருடைய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது.

இதனால் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

மருதானை டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்படுகையில், லோட்டஸ் வீதிக்கருகில் வைத்து பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ரஜரட்ட மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்தக்கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பரது தாயின் மரணவீட்டுக்கு உந்துருளியில் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர், உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டு இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் மட்டக்களப்பு திருகோணமலை வீதி வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமது நண்பனின் தாயொருவர் மரணித்த செய்தி கேட்டு அம்மரண வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோதே அவர்கள் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளது. சேருநுவர காவற்துறை விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று காலை வழங்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,

1) பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன் விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
2) ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர். Read more

யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளின் கீழ் கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்ற குற்றங்களை தடுப்பது மிகவும் குறைந்துள்ளதுடன், பொலிஸாரின் பலவீனமான நடவடிக்கைகளும் குற்றங்களைத் தடுக்க முடியாமைக்கான காரணம் எனத் தெரிவித்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பட்ட நிதியினூடு நேற்று 17-2-2018 காலை 10.30 மணிக்கு யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் வீதி அபிவிருத்திப்பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கயதீபன் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்சன் வலிதெற்கு பிரதேச்சபை உறுப்பினர்கள் கரிகரன், கெங்காதரன், வலன்ரெயின் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இச்செயலணியின் இதற்கு முன்னரான நான்கு அமர்வுகளின்போது வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத்தன்மைகள் தொடர்பாகவும் அத்தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற தடைகள் பற்றியும் மக்களுக்குச் சிறந்த பலனைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விதத்தில் குறித்த அபிவிருத்தி பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. Read more

கோப்பாய் தொகுதிக்கு உட்பட்ட வீதிகளில் இரண்டாம் கட்டமாக 15 வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
தேர்தல் தொகுதிக்கு 100 மில்லியன் ரூபா எனும் திட்டத்தின் கீழ் கோப்பாய்த் தொகுதிக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பரிந்துரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இருபாலை தெற்கு ஞானவைரவர் கோவில் வீதி, இருபாலை தெற்கு ஆரம்ப சுகாதார வைத்திய நிலைய வீதி, இருபாலை தெற்கு சிங்கராயர் லேன், இருபாலை கிழக்கு ஏ.ர் லேன், உரும்பிராய் வடக்கு இருளன் வீதி, உரும்பிராய் வடக்கு மடத்தடி வீதி, உரும்பிராய் வடக்கு நிலாமகளீர் வீதி, உரும்பிராய் கிழக்கு தபால் பெட்டி வீதி, உரும்பிராய் கிழக்கு அயட்டைய புலம் வீதி , அச்சுவேலி தெற்கு பயித்தோலை வீதி, கோப்பாய் மத்தி கண்ணகி அம்மன் வீதி, உரும்பிராய் மேற்கு மூன்று கோயிலடி வீதி, உரும்பிராய் தெற்கு செல்வபுரம் 2ம் ஒழுங்கை, கோப்பாய் வடக்கு கயட்டபுல வீதி, நீர்வேலி வடக்கு பண்ணாலை கிழக்கு வீதி ஆகிய 15 வீதிகளின் புனரமைப்புப் பணிகளை இரண்டாம் கட்டமாக (14,15,16)ஆகிய தினங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Read more

நெடுங்கேணி சேனைப்புலவு விவசாய போதனாசிரியர் பிரிவில் மல்லிகை செய்கை தொடர்பான வயல் விழா 17.12.2018 அன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி ரி .லிங்கநாதன் ,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி . சகிலாபானு மற்றும் விவசாயபோதனசிரியர்கள் , விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் ,பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . Read more

வவுனியா சிதம்பரபுரம் காட்டு விநாயகர் ஆலய அறநெறிப்பாடசாலை கட்டிடட திறப்பு விழா 16.12.2018 அன்று காட்டு விநாயகர் ஆலய தலைவர் சிவகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் ,சிறப்பு விருந்தினராக நகர சபை உறுப்பினர் கௌரவ க .சந்திரகுலசிங்கம் ,பிரதேச சபை உறுப்பினர் திரு .உத்திரியநாதன் Read more