அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.
இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தவிர மேலும் 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர். Read more
வாக்காளர் பெயர் பட்டியல்களுக்கான பெயர்களை இணைக்கின்ற முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் ரசிக பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் விருப்பத்துக்கமைய, அரசாங்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரை மஹிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர் மத்தியசுற்று வட்ட பகுதியில் உள்ள வடிகான் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.