அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லை ஊடாக இலங்கை ஏதிலிகள் சிலர் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமெரிக்க நாடொன்றில் இருந்து அவர்கள் ஏனைய நாடுகளின் ஏதிலிகளுடன் இணைந்து எல்லைத்தாண்ட முற்பட்டுள்ளனர். கைதானவர்கள் டெக்ஸாஸ் எல்லைப் பாதுகாப்பு சபை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்றுகாலைபதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் குறித்த பிரதேசத்தில் வாழும் ஆயிரத்து 383 பேர் அன்றாடம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.