ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
அதேநேரம் நாட்டின் பிரதான நகரங்களில் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார். நுகேகொட, பதுளை, பண்டாரகம, கண்டி, தங்காலை, புத்தளம், மொனராகலை, வெல்லவாய, மொறவக, ரத்தினபுரி உள்ளிட்ட 20 பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் என்ஜின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல், சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பிரேம ரமணன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த 32 வயதுடைய பிரேம ரமணன் கடந்த 5ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜே.வி.பினருக்கும் இடையிலான சந்திப்பு, பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் கட்சிக் காரியாலயத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஒய்வுபெற்றுச் செல்வதையிட்டு, குறித்த வெற்றிடத்துக்கு, சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பாலம் 5 மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். ஆவர் சுமார் 8 மணிநேரம் அங்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.
வாக்காளர் பெயர் பட்டியல்களுக்கான பெயர்களை இணைக்கின்ற முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் ரசிக பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் விருப்பத்துக்கமைய, அரசாங்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரை மஹிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.