கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும், 16 நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலா செல்வது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவித்துள்ளது. அத்துடன் நோர்வே, சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, மலேசியா, தாய்வான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. Read more
இலங்கையில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் செயற்பாடு வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து,
மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கைத் தலைவர் ஸஹ்ரானின், ஊடகச் செயலாளரை, 72 மணித்தியாலங்களுக்கு விசாரணை செய்ய அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் எச்.எம் அலி உஸ்மான் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா மொஹிதீன் சுல்தான் என்பவர் 3 வாள்கள் மற்றும் மன்னாங் கத்தி ஒன்று கைது செய்யப்பட்ட பின்னர் அவரது சகோதரரான எச்.எம் அலி உஸ்மான் என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை, சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். EP – PX 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார், புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நேற்றுமாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ எஸ் பயங்கரவாதியான சஹ்ரான் காசிமின் உரையாற்றிய 16 இறுவட்டுகளை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட மொஹமட் சஹ்ரானின் காசிமின் சகோதரர்கள் இருவர்