Header image alt text

புதுவருட தினமான இன்று தமது பிள்ளைகள் எங்கே..? என கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். a

வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

புத்தாண்டு உதயம் முடிவடைந்த பின்னர் உடனடியாக அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அதிவேக வீதி நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். Read more

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (13) பிற்பகல் நீர்கொழும்பு தளுபொதவிலுள்ள இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இளங்குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, அங்குள்ள இளைஞர்களுடன் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். Read more

ஐநா அமர்வு முடிந்துள்ளது. இரண்டு வருட கால அவகாசம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐநா தீர்மானத்தை நிறைவேற்றமாட்டோம் என்று அரசு முரண்பாடான நிலைமையைக் கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: அரசாங்கத்தின் நிலைப்பாடு அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் நான் நம்பவில்லை அவர்கள் தங்களுடைய இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவார்கள் என்று. யரராக இருந்தாலும் தேசிய அரசாங்கம் என்று சொல்லலாம். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறோம் என்று அவர்கள் எதையும் கூறலாம். ஆனால் அவர்கள் மாறமாட்டார்கள். Read more

இலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகின்றது. Read more

பிரதமரால் எல்லை நிர்ணய அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்பட்டால் விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அந்த அறிக்கை ஜனாதிபதியால் வர்த்தமானியில் வௌியிடப்பட்டதன் பின்னர் மாகாண சபை சட்டமூலத்தை திருத்தி முரண்பாடு உள்ள பிரிவுகள் தவிர ஏனைய பிரதேசங்களுக்கு தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது. Read more

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த அரச அச்சக திணைக்களம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வௌியிடப்பட்டுள்ளது

கொழும்புத் துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதெனத் தெரிவித்துள்ள மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க, நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80 ஆயிரம்  பேருக்கு அந்நகரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். Read more

நிதி ​அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவரப்போவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read more

கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நிறைவடைந்து விட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்ப்பில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலத்தில் உள்ள உண்மை, பொய்களை ஆராய்ந்த பின்னர் அதன் அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். Read more