ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நண்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமன கடிதத்தைப் பெற்றார்.
இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more
தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளரை இன்று மேல்மாகாண உளவுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அம்பாறையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து, தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் இருந்த பெண்கள் அணியும் வெள்ளை நிற ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ். தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினர் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களின் 22 அடையாள அட்டைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி பள்ளிவாசல்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த 8 தற்கொலைக் குண்டுதாரிகளும் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில், புலனாய்வு பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த மற்றுமொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.