வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த தடை ஏப்ரல் 30 ஆம் திகதி நீக்கப்பட்டது. Read more
வடக்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இரண்டாம் தவணைப் பாடசாலை இன்று ஆரம்பமான போதிலும் மாணவர்களின் வரவு பெரிதும் குறைந்த நிலையிலையே காணப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.