 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39ஆம் கொலனி வாய்க்காலில் நீர் ஓடும் துருசி பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39ஆம் கொலனி வாய்க்காலில் நீர் ஓடும் துருசி பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி குருமன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சந்திரகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந் 6 பேர் கொண்ட நண்பர்கள் சம்பவ தினமான நேற்று காலை முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள 39ம் கொலனியிலுள்ள வாய்க்காலில் நீராடச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த வாய்க்காலில் உள்ள துரிசுப் பகுதியில் உயிரிழந்தவர் முதலில் குதித்த நிலையில் அவர் அந்த சுழியில் மூழ்கி தத்தளித்ததையடுத்து அவரை காப்பாற்ற நண்பர் ஒருவர் நீரில் குதித்துள்ளார். அவரும் நீரில் மூழ்கித் தத்தளித்ததையடுத்து அவர்கள் இருவரையும் மீட்பதற்காக இன்னொருவர் குதித்துள்ளார்.
இவர்கள் மூவரும் நீரில் தத்தளித்தபோது ஏனைய நண்பர்கள் இருவரை மீட்டதுடன் முதலில் நீரில் குதித்தவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து நீரில் மூழ்கிக் காணாமல் போனவரை நேற்று இரவு வரையும் தேடிய போது அவரை கண்டுபிடிக்காத நிலையில் இன்றுகாலை குறித்த துருசுப் பகுதிக்கு அருகில் வாய்க்காலில் குநித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
