Header image alt text

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே ஈஸ்டர் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்ததாகத் தெரியவருகிறது.
Read more

பயங்கரவாதத்தை முறியடிப்பது தொடர்பாக, எதிர்வரும் வியாழக்கிழமை (16), ஐக்கிய அமெரிக்காவில், பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும் இடையில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதோடு, இதில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவின், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளனர். Read more

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்றுகாலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர். Read more

அண்மையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த சிறார்கள் குறித்து தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
011 2444447 011 2337039 011 2337042

ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மௌலவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் முதலியாகுளத்தில் வசித்துவரும் முனாஜிப் மௌலவி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த முனாஜிப் மௌளவி கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்றுமாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நேற்றுமாலை மழை பெய்த வேளையில் வீசிய காற்றின் காரணமாக இரண்டு வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரன் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். Read more

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் நேரடி தொடர்புடையவர்களெனக் கருதப்படும் 8 பேரை குருநாகலில் வைத்து கைது செய்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் 108 பேரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொச்சிக்கடையில், புனித அந்தோனியார் ஆலயத்தில் ஏற்படுத்திய குண்டுதாக்குதலின் தாக்குதல்தாரி, கிங்கஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிக்குச் சொந்தமான வாகனத்தில் ஏறி வருகைதந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் தேசிய பொறுப்பை துறந்துச் செயற்பட தயாரில்லை என தெரிவிக்கும் கடற்படையின் பேச்சாளர்  லுதினர் கமான்டர் இசுறு சூரிய பண்டார, சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற  தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு இது தொடர்பில்  மேலும் தெரிவித்த அவர்,   உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புத் தரப்பின் சோதனை செயற்பாடுகளுக்கு கடற்படை முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார். Read more