 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞன், உடையார்கட்டு தேராவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரராசா பிரசாந்த் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.