ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15ஆவது கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதன் முறையென்பதுவும் குறிப்பிடதக்கது.
இது தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பு கோல்ஃபேஸ் ஹொட்டலில் இன்று ஆரம்பமானது. மேலும், இந்தக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் கீழான சரத்துக்கள் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பான வழக்கை முடிவிற்கு கொண்டு வருவதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல்கள் தொடர்பான உங்களுடைய முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு, குறுந்தகவல்கள் (SMS) மூலம் அனுப்பி வைக்குமாறு, ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 1919 என்ற அவசர இலக்கத்துக்கு, இவ்வாறான தேர்தல்கள் முறைப்பாடு குறித்த குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலுக்காக வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் 7ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை நேற்று பிற்பகல் கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் அருவக்காலு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று இரவு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின்போது மோட்டார் குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.