யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது. Read more
ரெலோவின் சாதாரண அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம், வாக்காளர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அஞ்சல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முறிகண்டியில் முன்னெடுத்திருந்தார்.
தெஹிவளை கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக ஒன்றுகூடல் களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் சட்டவிரோத போதை பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.