இந்தோனேஷியாவின் நியூகினியா தீவில் 6.1 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் தென்கிழக்கே 311 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குறித்த தீவிலேயே இந்த நிலநடுக்கம் இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது. நில நடுகம் காரணமாக உண்டான சேத விபரங்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிசயம் அமைப்பின் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம் கிராமசேவையாளர் அலுவலக மண்டபத்தில் நாளை காலை 9 மணி முதல் இம்மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில், நேற்று அதிகாலை வீசிய சுழல் காற்று காரணமாக, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக் கைதி ஒருவர் தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்குமிடையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன நேற்றுக் காலை ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார்.