அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுகு;கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more
இலங்கையின் வடக்கு பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஆறு லட்சத்து 35 ஆயிரத்து 420 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக ஜப்பானிய தூதரகம்ப தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்த கனடா நாட்டவர் ஒருவர் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் திருவும் திருவலைக் கட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு, கிரான் கோரக்களிமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் மனைவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் பாடசலைகளில் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவடைகின்றது. இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்தேவி தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தொடரூந்து போக்குவரத்து இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து கட்டுப்பாட்டாளர் வஜிர பொல்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.