வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும் அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர். Read more
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் நேற்று மாலை சந்தித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர். சமல் ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வவுணதீவில் பயங்கரவாதிகளால் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று இரத்ததான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மேல்மாகாணத்தில் யாசகம் செய்வோரை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழும பணிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஏழாவது ´வன மித்ரா சக்தி போர் பயிற்சி´ நடவடிக்கைகள் நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடம்பெறவுள்ளது.