Header image alt text

மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. Read more

கடந்த வருடத்தில் 51 ஆயிரத்து 659 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்ததால் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிதொகையை வங்கியில் வைப்பிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தவகையில் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் இணையதளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

கொழும்பு கோட்டையில் இரந்து தலைமன்னமார் வரை செல்ல உள்ள தபால் புகையிரதத்தை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகையிரதமானது தினமும் இரவு 7.15க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விண்ணப்பதாரருக்கு SMS மூலமாக அறிவிப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. Read more

தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சேலம் மற்றும் மண்டபம் முகாமில் தங்கியிருந்த நான்கு அகதிகள் இன்று இலங்கையை நோக்கி சட்டவிரோதமாக படகில் இலங்கையை நோக்கி வந்தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், க.சிவநேசன், தா.லிங்கநாதன், வே.நல்லநாதர் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி), இன்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வான் விவகாரம் தொடர்பான ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, பொய்யான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைதுசெய்யுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனியவினால், கடந்த 24ஆம் திகதியன்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சட்டம் மற்றும் நீதியை நியாயமானதாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களும் அவ்வாறே அமைந்திருக்கும் என்று வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் பொதுவாக தற்போதைய அரசாங்கம் சேவையாற்றுவதாகவும் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தெரிவித்தார். Read more