 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்றுமாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நேற்றுமாலை மழை பெய்த வேளையில் வீசிய காற்றின் காரணமாக இரண்டு வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை குறித்த பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதியிலும் கூரையில் சில பகுதிகள் சேதம் அடைந்துள்ளதாகவும் மேலும் சில இடங்களில் இந்த காற்றினால் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.