Header image alt text

பொதுநலவாய செயலாளர் நாயகம் ஜனாதிபதி சந்திப்பு-

kamalesh_meetஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் கமலேஷ் சர்மாவுடன் வருகைதந்திருந்த ஐந்து பிரதிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை, கமலேஷ் சர்மா தலைமையிலான குழுவினர் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் திருமலை விஜயத்தை முன்னிட்டு விசேட விடுமுறை-

திருகோணமலை மாவட்டத்தில் 15ற்கும் அதிகமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் திருமலை மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு, நாளையும், நாளை மறுதினம் பாடசாலைகள் மூடப்படவுள்ளன. பாதுகாப்பு படையினர் தங்குவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளுக்குப் பதிலாக எதிர்வரும் வாரஇறுதி நாட்களான நவம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறும் எனவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவருக்கு பிணை-

துறைமுக வளாகத்திற்குச் சொந்தமான அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேர், 10 இலட்சம் ரூபா பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலினி கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களிடம், பாராளுமன்றத்திற்குச் சென்று வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏனைய இருவரையும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்குச் சென்று, வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

வெள்ளவத்தையில் காவல்துறை அலுவலரின் சடலம் மீட்பு-

கொழும்பு வெள்ளவத்தை 42வது ஒழுங்கைக்கு முன்னால் உள்ள கடற்கரைப்பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், வெள்ளவத்தை காவல்நிலையத்தில் கடமை புரியும் காவல்துறை அலுவலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று முற்பகல் கரையோரத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின்படி சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

பொதுநலவாய செயலாளர் கமலேஷ் ஷர்மாவின் யாழ்.ப்பாண விஜயம்-

Kamaleshபொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா வடபகுதிக்கான முதலாவது விஜயத்தை இன்றுமுற்பகல் மேற்கொண்டுள்ளார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியை சந்தித்து, வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கமலேஷ் ஷர்மா கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து இன்று மதியம் 1.30மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் சிவில் சமூகத்தினரை சந்தித்துள்ளதுடன் மாலை இந்தியன் வீட்டுத்திட்டம் குறித்து நேரில் சென்று பார்வையிடவும் ஏற்பாடாகியுள்ளது. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா நேற்று பிற்பகல் இலங்கைக்கு வருகைதந்திருந்தார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே, கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின் நோக்கமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை பொதுநலவாய செயலாளர் நாயகம், சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ் – கொழும்பு ரயிலுக்கு, வியாழன் வரை ஆசனப் பதிவு இல்லை-

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஆசனப் பதிவுகள் இடம்பெறாது எனவும் யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் தெரிவித்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களை முற்பதிவு செய்துகொள்வதற்காக கடந்த வாரம் அதிகளவான பொதுமக்கள் புகையிரத நிலையம் வருகை தந்தனர். இந்நிலையில், யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட கடுகதி, கடுகதி, யாழ்.தேவி, தபால் புகையிரதம் ஆகிய ரயில்களின் இருக்கைகள் முழுவதும் முற்பதிவு செய்யப்பட்டன. அத்துடன், யாழ் – கொழும்பு – மாத்தறை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) செல்லும் ரயிலுக்கான இருக்கைகளும் முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளன. இதனால், இன்று முதல் தொடர்ந்து வரும் 5 நாட்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுவிட்டன என அவர் மேலு; சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2014

punnalaikattuvan  (1)யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2014 நேற்று (24.10.2014) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. த.லோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரூபா உதயரட்ணம் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி கமலினி பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். முதலில் வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் (1,50,000) கொடுத்து வாங்கிய மேலைத்தேய வாத்தியக் கருவிகளை (பாண்ட் வாத்தியக்கருவிகள்) ஆயக்கடவைப் பிள்ளையார் கோவிலில் வைத்து திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய அதிபரிடம் கையளித்தார். இதன்மூலம் முதற்தடவையாக இப்பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டு பாண்ட் வாத்தியக்குழு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆசியுரையினை திரு. சிவஸ்ரீ சோ.கெங்காதரக்குருக்கள் அவர்கள் வழங்க, உப அதிபர் திரு. சி.முரளிதரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் து.லோகேஸ்வரன் (லோகன்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

punnalaikattuvan (8)இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது, என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் இன்று மாறுபட்டு மாணவர்களிடையே ஒரு போட்டிப் பரீட்சையாகவே மாற்றப்பட்டிருக்கின்றது. அது இன்றைக்கு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் அழுத்தத்தைக் கொடுக்கின்ற ஒரு விடயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இப் பரீட்சையானது பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே இருக்கக்கூடிய பாடசாலைகளில் வாய்ப்பு வசதியற்ற திறமையான மாணவர்களுக்கு நகரப் பகுதிகளிலுள்ள பெரிய பாடசாலைகளில் வாய்ப்பளித்து அவர்களுடைய கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது. அந்த நோக்கம் இன்று முற்றுமுழுதாக முறியடிக்கப்பட்டு ஒரு போட்டியாகவே இடம்பெற்று வருகின்றது. இதை சீர்படுத்த வேண்டும். அதாவது எந்த நோக்கத்திற்காக புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்யக்கூடிய வகையிலே அது நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

punnalaikattuvan (10)punnalaikattuvan  (11)punnalaikattuvan (12)punnalaikattuvan  (6)punnalaikattuvan (7)punnalaikattuvanpunnalaikattuvan (15)punnalaikattuvan (19)punnalaikattuvan (2)punnalaikattuvan  (4)

கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு விஜயம்-

(பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின் நோக்கமென கூறப்படுகிறது. அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு-

பொலிஸாருக்கு எதிராக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரினால் தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார் செயற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அதுகுறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு-

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்துவைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் செயலகம் இயங்கிவந்த கட்டட தொகுதியில், இந்த தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், வட மாகாண தேர்தல் ஆணையாளர் நமீல், மேலதிக அரசாங்க அதிபர், உதவி தேர்தல் ஆணையாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மூதூர் களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கல்-

திருகோணமலை மூதூரிலுள்ள களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சம்பூர் இறால் பாலம் அருகில் பெருமளவான மீன்கள் கரையொதுங்குவதால் ஆற்றை நம்பி மீன்பிடியில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச மீனவர் சமாஜ தலைவர் எஸ்.கிருஷ்ணபிள்ளை கூறியுள்ளார். களப்பில் நேற்றுக் காலைமுதல் மீன்கள் கரையொதுங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பூர் இறால் பாலத்திற்கு அருகில் மீன்கள் கரையொதுங்கியமை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் நிறைவடையும்வரை களப்பு மீன்பிடிகளை தற்காலிகமாக தடை செய்யுமாறு பொலீசாருக்கு அறிவித்திருப்பதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் திருமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு கூட்டமைப்பு பங்கேற்பு

tna2410214_3tna2410214_5வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும். இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த கைலாகு செய்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாங்கறியாதவனின் திட்டம் எப்படி: ஜனாதிபதி

m_241014_1நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதுடன் மக்களின் மனங்களை கவரும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை 1.30க்கு கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும். சம்பிரதாயபூர்வமான வரவு-செலவுத்திட்ட பெட்டியை இம்முறையும் எடுத்துவராத நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோவையுடன் அவைக்குள் பிரவேசித்தார். Read more

சுதந்திர இலங்கையின் 69வது வரவுசெலவுத் திட்டம்

m_241014_3இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நாட்டின் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றினார். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து முன்வைக்கின்ற 10வது வரவுசெலவுத் திட்டம் இது. வரும் ஜனவரி மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில், சட்டரீதியான சர்ச்சைகளுக்கு மத்தியில் மூன்றாவது தவணைக்காகவும் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்படும் இந்த வரவுசெலவுத் திட்டம் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டிருந்ததைப் போல வாக்கு வங்கியை இலக்குவைத்து இம்முறை வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். Read more

சுன்னாகம் கந்தரோடையில் இனந்தெரியாத குழுவொன்றினால் ஒரு குடும்பம் தாக்கதலுக்கு உள்ளாகியுள்ளது.

imagesசுன்னாகம் கந்தரோடைப்பகுதில் புதன் இரவு வீடபுகுந்த குழவொன்று மூன்று பிள்ளைகளின் தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரை தாக்கியுள்ளது. இன்னும் இரு சிறு பெண் பிள்ளைகள் இருந்தபோதும் அவர்கள் பயத்தில் ஒளித்துக் கொண்டத்தில் தப்பிவிட்டார்கள். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தந்தையை யாழ்வைத்திய சாலைக்கு இடம்மாற்றியுள்ளனர். தாக்கியவர்கள் தலைக்கவசம் (கெல்மெற்) அணிந்து வாள் இரும்புக்கம்பி மரப்பொல்லுகள் கொண்டு அகோரமாகத் தாக்கியதில் தந்தை ஆபத்தான நிலையில் உள்ளார். தாயும் மகனும் படுகாயம் அடைந்தள்ளனர்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற வடமாகாணசபை உறுப்பினரும் புளொட் தலைவருமான சித்தார்த்தன் அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று காயப்பட்டவர்களை பார்வையிட்டு நடந்தவற்வை கேட்டறிந்து உடன் பொலிசாருடன் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்யுமாறு கேட்டுள்ளதுடன். மேலும் உரிய அதிகாரிளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார் Read more

கனடிய நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சிப்பாய் பலி

canada_police_CIகனடாவின் ஒட்டாவாவில் நாடாளுமன்றத்தை ஒட்டியிருந்த நினைவிடம் ஒன்றில் காவலுக்கு நின்ற சிப்பாயை துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுவிட்டு, பின்னர் பொலிசார் விரட்ட நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் அவர் நுழைந்துள்ளார். சிப்பாய்களாலும் பொலிசாரும் சூழ்ந்துகொள்ள நாடாளுமன்றம் அடைக்கப்பட்டுள்ளது. இடத்தை அடைத்து சிப்பாய்கள் தேடி வருகின்றனர்இடத்தை அடைத்து சிப்பாய்கள் தேடி வருகின்றனர்  கருப்பு உடையணிந்த ஒருவர் துப்பாக்கி ஏந்தி வந்ததைப் பார்த்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்.

துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருக்க பொலிசார் பதுங்குவதை நாடாளுமன்றத்துக்குள் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் காட்டுகின்றன. வந்த துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக கட்டிடத்தை பொலிசார் தேடிவருகின்றனர். ஒட்டாவாவில், ஜன்னல்களை ஒட்டியும், மேற்கூரையிலும் நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை, குறைந்த அளவில் இருந்து மத்திய அளவுக்கு அரசாங்கம் அறிவித்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த திங்களன்று கியுபெக் நகரில் அண்மையில் இஸ்லாத்துக்கு மாறியிருந்த நபரொருவர் கனடிய சிப்பாய்கள் இருவர் மீது காரைக் கொண்டுவந்து மோதி அதில் ஒருவரைக் கொன்றும் ஒருவரைக் காயப்படுத்தியும் இருந்தார். அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றிருந்தனர்

கடந்த வருடம் நவம்பர் மாதம் காணாமல் போன சிறுவன் பிச்சைக்காரரிடமிருந்து மீட்பு

Untitledஅம்பலாங்கொடை பஸ் தரிப்பிடத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் காணாமல் போன மூன்று வயதான சிறுவன், தம்புள்ளையிலுள்ள பிச்சைக்காரரிடமிருந்து நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன், அக்குரஸையை வசிப்பிடமாக கொண்ட தனது ஆச்சியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்னு ஆச்சி தனது பேரனுடன் அம்பலங் கொடையிலுள்ள பஸ் தரிப்பிடத்துக்கு சென்றபோதே குறித்த யாசகர், ஆச்சியை ஏமாற்றி சிறுவனை கடத்திச்சென்றுள்ளதாகவும். பேரனை இழந்த ஆச்சி, பேரனுடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தை நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகித்துள்ளார். சிறுவனின் தாய், வேலைவாய்ப்பு தேடி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அம்பலாங்கொடையில் வைத்து 3 வயது சிறுவனைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read more

யாழ் விடத்தல்பளை கமலாசினி வித்தியாலய பரிசளிப்பு விழா-

1யாழ். விடத்தல்பளை கமலாசினி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா-2014 நேற்று 20.10.2014 திங்கட்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சர்வேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக முன்னைநாள் ஓய்வு நிலை அதிபர் திரு. கதிரித்தம்பி மற்றும் வரணி, வைத்திய அதிகாரி உயர்திரு. வீ. ஆறுமுகம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்ட குழாய்க்கிணறும், அதற்குரிய குடிநீர்க் குழாய் கட்டமைப்பும் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.  தொடர்ந்து பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

தீபாவளி திருநாளில் உயிர்களை வதைப்பதை நிறுத்தி புனித தன்மையை கடைப்பிடியுங்கள் இந்துக்களிடம் சைவ மகா சபை கோரியுள்ளது.

saivaதீபாவளி தினத்தன்று சில இடங்களில் ஆடு, மாடுகளை கொன்று அதன் ஊணை புசிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயற்பாடுகளை நிறுத்தி தீபாவளியின் அர்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். சிவ விரதங்களில் முக்கியமான விரதமாகிய கேதார கௌரி விரத முடிவு நாளில் வருகின்ற தீபாவளி தினத்தன்று இந்துக்கள் புனிதத் தன்மையை கடைப்பிடிப்பது முக்கியமானது. அதை விடுத்து அந்த தினத்தன்று உயிர்களை வதைத்து அதன் ஊணை புசிப்பது பாவமான காரியமாகும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதானது புனிதமான கேதார கௌரி விரதத்திற்கு மாசு கற்பிப்பதற்கு ஒப்பானது. தீபாவளி என்பது அரக்க குணத்தை அழித்த நாள். அந்த நாளில் நாங்கள் எங்களிடம் அரக்க குணத்தை வரவழைத்து பிற உயிர்களை வதைப்பது எமது சமயத்திற்கு ஏற்புடையதல்ல. எனவே, இந்த நாளில் தன்னுயிர் போல மண்ணுயிர்களையும் நேசிக்கும் இயல்பை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தீபாவளி தினத்தன்று சிலர் ஆடு, மாடுகளை அறுத்து அதன் ஊனை புசிக்கின்ற செயற்பாடுகள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அவர்கள் இன்று தீபாவளியின் அர்த்தத்தையும் கேதார கௌரி விரதத்தின் மகிமையையும் உணர்ந்து குறித்த விரதத்தை அனுஷ்டித்து வருகின்றனர். இதேபோன்று ஏனைய மக்களும் இதனை கடைப்பிடிக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளை கடித வழக்கு விவகாரம் சட்ட மா அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்

navipillaiyin visaaranaiஐக்கிய நாடுகள் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் எழுதிய வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. சட்டமா அதிபரை, ஒக்டோபர் 30ஆம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு எதிராக தண்டனை சட்டக்கோவையை செயற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கும் சட்டமா அதிபருக்கும் நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கையிலுள்ள இனக்குழுக்களுக்கிடையில் குறிப்பாக சிங்களவர் மற்றும் தமிழர் இடையில் காழ்ப்புணர்வு, முரண்பாடு மற்றும் அமைதியின்மை என்பவற்றை தோற்றுவிக்கக்கூடிய கூற்றுக்கள் இந்த கடிதத்தில் உள்ளதென மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். பொலிஸ் மா அதிபரும் சட்டமா அதிபரும் இந்த மாகாண சபை உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்தவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். முறைப்பாட்டாளர்கள் பொலிஸ் மா அதிபரும் சட்டமா அதிபரும் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது, அவரது அலுவலகம், விசாரணை நடத்த வேண்டும் எனவும் அந்த விசாரணையின் போது யுத்தம் தொடருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும் கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு, ஓகஸ்ட் முதல் வாரத்தில் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தனர். தமிழ் மக்களுக்கு எதிராக சகல அட்டூழியங்களையும் ஆராய்ந்து இனவொழிப்பு இடம்பெற்றதா? என ஆராய வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் விசாரணை அணியினரை இந்த 33பேரும் கடிதம் மூலம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிரணியில் பங்களிப்போம், பொது வேட்பாளர் தொடர்பில் முடிவில்லை மனோ கணேசன்,

இது தொடர்பான ஊடக அறிக்கையில்—

imagesCAXROG66கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் பல்வேறு பரஸ்பர சமகால முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உரையாடினோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் பங்களிக்கும் என்றாலும் பொது வேட்பாளர் தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னமும் எந்த ஒரு நிலைபாட்டையும் நாம் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பாக  முடிவெடுக்கும் முன்னர் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை சந்திக்க எண்ணியுள்ளதாக நான் விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன். அதுபோலவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பில், ஊடகங்களில் பல கருத்துகள் கூறப்பட்டாலும்கூட,  ஒரு அவசரப்படாத போக்கையே தமது கட்சி தலைமை முன்னெடுப்பதாக விக்னேஸ்வரன் என்னிடம் தெரிவித்தார்.  அத்தகைய ஒரு முடிவெடுக்கும் வேளையில், வடமாகாண முதலமைச்சர் என்ற அடிப்படையில் எதிர்நோக்கும் பாரிய சிக்கல்களை தமது கட்சி கணக்கில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார். Read more