Header image alt text

பா.உ கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் இரத்ததான நிகழ்வு ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

P1090461யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள ஐயனார் சனசமூக நிலையத்தில் மேற்படி சனசமூக நிலையத்தின தலைவர் திரு. யுவராஜ் அவர்களது தலைமையில் அண்மையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வினை யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பின் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
Read more

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களால் உதவிகள் வழங்கிவைப்பு-(படங்கள்)

20150923_1046482015ம் ஆண்டிற்கான வட மாகாண சபையின் உறுப்பினர் ஒதுக்கீட்டு நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 17 பேருக்கான கூரைத்தகரங்கள் மற்றும் நல்லின மாடு, ஆடுகளும்; வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ம.தியாகராஐh, இ.இந்திரராஐh, செ.தர்மபாலா மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. அசங்க காஞ்சனகுமார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் வவுனியா சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஆலய குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினரிடம் மேற்படி ஒலிபெருக்கி; சாதனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை கல்லாண்டகுளம் வானவில் சிறுவர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் நாதன் வாசிகசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சரூபன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் வட மாகாண சபை உறுப்பினர்களான திரு. ஐp.ரி.லிங்கநாதன் மற்றும் திரு. இந்திரராஐh ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். Read more

ஜனாதிபதி நியூயோர்க்கிற்கு விஜயம்-

presidentஐக்கிய நாடுகளின் 70ஆவது பேரவை கூட்டத்தில் பங்குகொள்வதற்காக நேற்றைய தினம் அமெரிக்கா நோக்கி பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியூயோர்க் சென்றடைந்துள்ளார். நிவ்யோர்க் மற்றும் வாசிங்டனுக்கான இலங்கை தூதுவர்கள், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றுள்ளனர். நாளையதினம் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே, இருதரப்பு கலந்துரையாடல்கள் பல இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இன்றைய மாணவர்களை சாதனையாளர்கள் ஆக்கவேண்டும்-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-

P1060334யாழ். சித்தன்கேணி முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது இவ் நிகழ்வின் போது விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளார் திருமதி. நாகரஞ்சினிஐங்கரன், வலி மேற்கு பிரதேசத்தின் முன்பள்ளி இணைப்பாளர் செல்வி. நிரஞ்சனா, சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், குறித்த முன்பள்ளியின் ஆசிரியர் செல்வி. லீலாவதி மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் என பலரும கலந்து கொண்ட நிலையில் குறித்த விருந்தினர்கட்கு மலர் மாலை அணிவித்து சிறார்களின் பாண்ட் வாத்தியம் சகிதம் விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளார் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், உரையாற்றும் போது இன்றைய சமூகத்தின் முன் உள்ள சாவால் அறிவுப்புலம் சார்ந்த போட்டி நிலையாவே உள்ளது. இன்றைய சமூகத்தில் பெற்றோர்கள் ஒவ்வோர்வரும் பலத்த முயற்சியின் மத்தியில் மாணவர்களது கல்வி நிலைக்காக போராடி வருகின்றனர். Read more

சேயா சதெவ்மி கொலைச் சந்தேகநபர் குற்ற ஒப்புதல்-

seya sadevmiகொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மியை கொலை செய்தது தாம் என நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளார். கம்பஹா பெம்முல்லையில் சந்தேகநபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பெற்ப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியமைச்சில் தமிழ்மொழிக்கு தட்டுப்பாடு-ஜோசப் ஸ்டாலின்-

stalinகல்வியமைச்சில் நடைபெறும் கூட்டங்கள், செயலமர்வுகளின்போது தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் 97 கல்வி வலயங்கள் உள்ளன. அதில், 24 கல்வி வலயங்கள் முழுமையான தமிழ் கல்வி வலயங்களாகும். எனினும், கல்வியமைச்சில் நடைபெறும் கூட்டங்கள், செயலமர்வுகள் தமிழ்மொழி மூலம் நடைபெறுவதில்லை. இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியமைச்சில் நடைபெற்ற 1,000 பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடலின் போது தமிழ்மொழி மூலம் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. தமிழ்மொழி மூலம் சுற்றறிக்கைகளும் வழங்கப்படவில்லை. சுற்றறிக்கைகள் தமிழ்மொழி மூலம் வெளியிடப்பட்டாலும் அது காலம் தாழ்த்தியே வெளியிடப்படுகின்றது. Read more

புத்திக்க பத்திரணவிடம் குற்றப் புலனாய்வினர் விசாரணை-

budhdhikaஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இராணுவத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல் குறித்து புத்திக்க பத்திரண வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார். இதன்போது, இராணுவத்திற்கு உணவு விநியோகிக்கும் போது மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேஜர் ஜெனரல் மற்றும் ஜெனரல் ஆகியோர்மீதே தாம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் புத்திக்க பத்திரண குறிப்பிட்டார். மேலும், குறித்த நபர்களை அவர்களது பிரிவுகளிலிருந்து இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை-

parliamentபண விரயத்தை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அத்துடன், அத்தியாவசியமான பயணங்களுக்காக செல்லும் அரச அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்ததாகவும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மெக்கா அருகே கூட்டநெரிசலில் சிக்கி 300ற்கும் மேற்பட்டோர் பலி-

makkaமெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் (ஹஜ் பெருநாள்) பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்ற நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவிற்கு இவ்வாண்டிற்கான ‘ஹஜ்’ பயணம் இன்று தொடங்கியது இந்நிலையில், இன்று ஹஜ் புனித வழிபாட்டிற்காக இலட்சக்கணக்கானோர் குவிந்தது காரணமாக மெக்கா மசூதி அருகே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியிருந்தன. நெரிசலில் சிக்கி 400 பேர் வரை காயம் அடைந்ததாக சவுதி அரேபியத் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டது. இதற்கிடையே, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மினாவில் சாத்தான் சுவர்மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் இதன்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300ற்கும் மேல் என கூறப்படுகின்றது.