Header image alt text

மொறட்டுவ பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினரின் தமிழருவி -2015 நிகழ்வு

tamil aruvi 00இன்று கொழும்பு ராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல்கலைகழக மாணவர்களின் கலை நிகழ்சிகளும் கலை, தமிழ் வளர்த்த ஈழ பெரியார்களை கவரவிப்புகளும் போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்குதல்களும் இடம் பெற்றன. இன்றைய நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக மேல் மாகாண சபை ஆளுநர் க.லோகேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் மு.குலேந்திரனும் கலந்து கொண்டார்கள். நடனம், இசைக்கச்சேரி, சிறப்பு மக்கள் மன்றம், மலர் வெளியீடு, நாட்டிய நாடகம், கவியரங்கம், வில்லுப்பாட்டு உட்பட பல நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியாக இடம்பெற்றன.PHOTS⇒ Read more

முன்பள்ளி சிறார்கட்கு பா.உ. சித்தார்த்தன் பரிசில்கள் வழங்கி வைப்பு

Muzhai03அண்மையில் மூளாய் மனித வள சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தால் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு விழா குறித்த முன்பள்ளியில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்துக் கொண்ட யாழ் -கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்.சித்தார்த்தன் அங்கு கல்வி கற்கும் மாணவர்கட்கான புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.ச.சசிதரன், குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர், முன்பள்ளி அமைப்பின் நிர்வாகத்தினர், மற்றும் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.PHOTOS⇒ Read more

துணைவி பாடசாலை மணவர்கட்கு காலணிகள் வழங்கப்பட்டது.

Thunaivi05வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் நாட்டில் இருந்து இயங்கும் வு.சு.வு தழிழ் வானொலின் ஊடான புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் நடாத்தப்படும் ‘தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம்’
என்ற செயல் திட்டத்தின் கீழ் சுவிஸ் நாடடில் இருந்து திருமதி சந்திரமாலா அவர்கள் வழங்கிய உதவியின் பிரகாரம் வட்டுக்கோட்iடைப் பகுதியில் இயங்கிவரும் துணைவி அ.மி.த.க பாடசாலையில் உள்ள 30 பாடசாலை மாணவர்கட்கு பாடசாலைச் சப்பாத்துகள் வாங்கி வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.PHOTOS⇒ Read more