Header image alt text

தண்டுவான் பகுதியில் வரவேற்பு நிகழ்வும் கலந்துரையாடலும்-(படங்கள் இணைப்பு)

photoமுல்லைத்தீவு தண்டுவான் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர் ஆகியோரை பிரதேச மக்கள் வரவேற்கும் நிகழ்வும் கலந்துரையாடலும் இன்றுபிற்பகல் 3 மணியளவில் தண்டுவான் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், ரவிகரன் ஆகியோரும், பாடசாலையின் அதிபர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கிராம மக்கள் தங்களுடைய பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் என்பன தொடர்பில் விரிவாக தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள், கல்வி செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. Read more

விழிநீர் அஞ்சலிகள் – அமரர் சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள்

ammaயாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள் நேற்று 25.09.2015 வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னார் எமது கழகத்தின் மூத்த உறுப்பினரான விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த, தான் கொண்ட கொள்கைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்த தோழர் பாரூக் (சி.கணேசலிங்கம்) அவர்களின் அன்புத் தாயாராவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் 179ஃ10, மூன்றாம் ஒழுங்கை திருநாவற்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (27.09.2015) முற்பகல் 11மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
தொடர்புகட்கு: 0771654136, 0775155393 (குடும்பத்தினர்)

ஜனாதிபதி மைத்திரிபால இந்தியப் பிரமருடன் சந்திப்பு-

modi maithriஅமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா – இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பூடான், சைப்ரஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வஷரூப் கூறுகையில், இலங்கையில் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு-

lanka londonஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை இணக்கம் வெளியிட்டமை குறித்து பிரித்தானியா தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை என, பிரித்தானியாவின் பிரதி வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமது இணக்கத்தை வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி நேற்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 6 மாதங்களில் 27 சிறுவர் துஷ்பிரயோகங்கள்-

abuse (5)யாழ்ப்பாணத்தில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன. கடந்த 03 வருடங்களில் 167 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும் 2014ம் ஆண்டு 69 துஷ்பிரயோக சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு ஜூன்மாதம் வரை 27 துஷ்பிரயோக சம்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் என்பன தொடர்பில் கடந்த 2013ம் ஆண்டு 104 சம்பவங்களும், 2014ம் ஆண்டு 83 சம்பவங்களும், 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 29 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் யாழ் மாவட்டத்திலே கடந்த 2009ம் ஆண்டு ஆயிரத்து 17 சிறுவர்களும் 2014ம் ஆண்டு ஆயிரத்து 71 சிறுவர்களும் 2015ம் ஆண்டு ஐனவரி மாதம் வரை ஆயிரத்து 156 சிறுவர்களும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு-

land slideநுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கொத்மலை – ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் நேற்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றுகாலை இரண்டு வயதுடைய சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ஷரூபினி (2 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மேலும் இரு கால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அன்பு இல்லத்திற்கு உதவி-(படங்கள்)

l11முத்துஐயன்கட்டு அன்பு சிறுவர் இல்லத்தினர் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் பிள்ளைகளுக்கான நுளம்பு வலை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பை என்பவற்றினை தந்துதவுமாறு கேட்டிருந்தனர் இதற்கமைவாக நேற்று முன்தினம்  (23.09.2015) சுமார் 16500 ரூபா பெறுமதியான 33 புத்தக பைகளும் 13500 ரூபா பெறுமதியான 30 நுளம்பு வலைகளும் அன்பு இல்ல நிர்வாகத்தினரிடம் அன்பு இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையினை எமது வட்டுக்கோட்டை உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனாக முன் வந்து வழங்கியுள்ளார். (தகவல் – வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

Read more