 மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் சிறீலங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கமைய தொடர்ந்து மிஹின் லங்கா விமான நிறுவனம் ஊடாக மேற்கொள்ளவுள்ள விமான பயணங்கள் அனைத்தும் சிறீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் இனி சிறீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.