20161201_145304யாழ். தெல்லிப்பழை பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-2016 நிகழ்வு பாடசாலையின் பொன்னையா கலையரங்கில் பாடசாலையின் அதிபர் திரு. கதிரேசு பத்மநாதன் அவர்களின் தலைமையில் இன்று (01.12.2016) வியாழக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. மாணிக்கம் ஆனந்தகுமார் (கோட்டக்கல்வி அலுவலர், தெல்லிப்பழை கோட்டம்), திரு. சிவப்பிரகாசம் துர்க்கானந்தன் (பழைய மாணவர், நில அளவையாளர் -மன்னார்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசியுரையினை பிரம்மஸ்ரீ ம.மகேந்திரசர்மா (பிரதமகுரு, வரத்தலம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்) அவர்கள் வழங்கினார். தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்று மாணவ, மாணவியர்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

20161201_143919 20161201_143925 20161201_144106 20161201_144132 20161201_144213 20161201_144245 20161201_144428 20161201_144539 20161201_144938 20161201_145224 20161201_145311 20161201_145814 20161201_145955 20161201_151126 20161201_154144 20161201_154205 20161201_154211 20161201_155933 20161201_160224 20161201_160440 20161201_160520 20161201_160610 20161201_160820 20161201_160927 20161201_162646 20161201_163157 20161201_164008 20161201_164950 20161201_170004