img_3844வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்கள் தனது வருடாந்த அபிவிருத்தி மூலதன நன்கொடையில் இருந்து ஒட்டுசுட்டான், சிவநகர் ஆதிகணபதி அறநெறிப் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக ரூபா 50,000/-ஐ ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலைக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் அறநெறிக் கல்விக்குத் தேவையான உபகரணங்கள் என்பன மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களால் ஆதி கணபதி அறநெறிப்பாடசாலை ஆசிரியைகளிடம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு. ஐ.அனுகுந்தனன் முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வைபவத்தில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளும் பங்குபற்றியிருந்தனர்.