இலங்கைக்கான தூதரகமொன்றை அடுத்த வருடம் ஜனவரியில் எத்தியோப்பியாவில் உத்தியோகபூர்வமாக திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான எத்தியோப்பிய தூதுவரும், ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத்துக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான தஸநாயக்க சுமித் பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையகத் தலைவர் கொசஸானா டிலாமினி சூமாவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இந்த தூதரகம் திறக்கபடவுள்ளது. இதன்போது ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத் தலைவருக்கு அழைப்பிதழ் விடுக்கப்படும் என தூதுவர் சுமித் பிரியந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, எத்தியோப்பியாவில் கடந்த நவம்பர் மாதம் குடியிறுப்பாளர்களுக்கான பணியகம் ஒன்றை இலங்கை நிறுவியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.