இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்சும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் கிராமசேவையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுகாலை 9.30மணயளவில் செம்மணிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 57 வயதுடைய கந்தையா சிறீவிக்னேஸ்ராஜா என்ற கிராமசேவையாளரே படுகாயமடைந்துள்ளார்.
கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நாவற்குழி சந்தியில் இருந்து செம்மணி வீதிக்கு பயணிக்க எத்தனித்த வேளை அக்கரைப்பற்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more








