Header image alt text

ananthiயாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், விரைவான விசாரணையை நடாத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரி, நாளை ஒரு மணிநேர கதவடைப்பை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதை தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் நிரூபிக்கின்றன. அரச இயந்திரம், இவ்வாறான குற்றங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்காமையே, இக் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. Read more

sdsகாணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை வெளியிடக்கோரி, வவுனியாவில் இடம்பெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவினர்கள், மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம், 4 ஆவது நாளாகத் இன்றையதினமும் தொடர்கின்றது.

qwqஇலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான, பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை 10.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பணியகத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

auto societyகாணாமல் போனோரின் உறவினர்களால்வ வுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா குடியிருப்பில் இருந்து இன்றுகாலை ஆரம்பமான குறித்த பேரணி, வவுனியா நகருக்கு சென்று, பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றுவரும் பிரதான தபாலக முன்றலுக்குச் சென்றது.

indo lanka forign ministersஇலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, நேற்றையதினம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தரன்ஜித் சிங் சந்து நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களை கையளித்து, முறைப்படி இலங்கைக்கான தூதுவராக பதவியேற்றுக் கொண்டிருந்தார். இந்நிலையிலேயே நேற்று அவர் வெளிவிவகார அமைச்சரை முதல்முறையாக சந்தித்து பேச்சுக்களை நடத்தினார். Read more

sdds (2)இந்தியாவின் 68வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போதுஇந்திய துணைத்தூதுவர் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் தமிழ் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மாணவர்கள், எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

P1410252முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான   திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் இன்றுமுற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்க இருந்த கட்டடத் தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை தராததன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணி, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. Read more

vvddவவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்கு இன்று வந்த வைத்தியர் குழு, உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். Read more

dfdfdயாழ். ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் நேற்று கர்ப்பிணி பெண் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் பெப்ரவரி 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகா (வயது27) என்ற பெண் கொடூரமான முறையில் நேற்று கொல்லப்பட்டார். முச்சக்கரவண்டி ஒன்றில் வந்தவர்கள் பகல் 11.00 மணியளவில் தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர்மீது தாக்குதல் நடாத்தியதாக கூறப்படுகிறது. Read more

accகிளிநொச்சி கட்டை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என் கவிந்திரன் (வயது 52) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர், கிளிநொச்சி அன்னை சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிவதுடன், பாடசாலை விட்டு வீடு திரும்பும்போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.