Header image alt text

tamil captiveவவுனியாவில், கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த காணாமல்போனோர் உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து,

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sfdfdசென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 170 பேரை பொலிசார் கைது செய்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 6நாட்கள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பொலிசார் வெளியேற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுவதும் 132 இடங்களில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். Read more

unnamed (1)பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் தலைமையில் நேற்றுபிற்பகல் 2.30க்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் “அறிவொளி” இல்லத்தில் நடைபெற்றது.

சிறப்பு அதிதியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Read more

medicalகாணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில் இறுதியான முடிவை அறிவிக்குமாறும், அரசியல் கைதிகளாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more

maithriமொங்கோலியா, லிதுவேனியா, பனாமா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் ஆகியோர் தமது நியமனக் கடிதங்களை இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.

மொங்கோலியா நாட்டின் தூதுவர் கொன்சிக் கேன்ங்போல்ட், லிதுவேனியா தூதுவர் லைமொனாஸ் தலத் கெல்ப்ஸோ, பனாமா தூதுவர் சொர்வியோ சௌல் சனுடியோ பெதன்கோர்ட் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். Read more

murderயாழ். ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் தயான இப்பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்றுமதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, பொலிஸார் கூறினர். Read more

gnanasaaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குமார்கள் மூவருக்கு எதிராக, ஹோமாகம நீதிமன்றில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம பொலிஸாரினாலேயே, கடந்த திங்கட்கிழமையன்று, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர், வித்தாரன்தெனியே நந்த தேரர் மற்றும் எம்பிலிபிட்டியே விஜித்த தேரர் ஆகியோருக்கு எதிராகவே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

asdsdsகாணாமல் போனோரின் உறவினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்று வரும் இப்போராட்டம், வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளுடன் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. Read more

bombகிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத வெடிபொருள் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அதனை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

protest (1)கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில், திருகோணமலையிலும் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து மேற்படி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். Read more