காணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம். எமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் கடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். Read more







