Header image alt text

courtsயாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்புச் சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. Read more

sfயாழ். அரியாலை நெலுக்குளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த வாகனம் ரயிலுடன் மோதுண்டதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றுமுற்பகல் 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த குறித்த இராணுவ வாகனம்மீது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியதுடன் அந்த வாகனத்தை 300மீற்றர் வரை இழுத்து சென்றுள்ளது. Read more

dgfgfgfவடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் சாரதிகள், ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளைக் கண்டித்தே இப் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளுக்கும், தனியார் பஸ் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகளும் கைகலப்புகளும் இடம்பெறுவதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், கடந்த 2ஆம் திகதிடு, புறக்கணிப்பில் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

fsdsweமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டத்துடன் வவுனியாவிலிருந்து சென்ற சிலரும் இணைந்து கொண்டுள்ளனர்.

பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமை அகற்றி, தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து 10ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியிலிறங்கி மக்கள் நேற்று முதல் மறியல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சொந்த நிலத்தில் குடியேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதே இவர்களது நிலைப்பாடாக அமைந்துள்ளது.

l2யாழ். பொன்னாலை வரதராஐப்பெருமாள் வித்தியாலயத்திற்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து 14 வெற்றிக்கிண்ணங்களும் 80 பெண்சில் பெட்டிகளும் பாடசாலை அதிபரிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலையின் அதிபரினால் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பெண்சில் பெட்டிகளை தந்துதவுமாறு விண்ணப்பம் செய்யப்பட்டதற்கு இணங்க வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இவ் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. Read more

O Panneer40 நிமிட தியானத்துக்கு பின் முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி; என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர், கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கினர், முதல்வராக்கி அசிங்கப்படுத்தி விட்டனர்,  தொண்டர்கள் விரும்பும் தலைவர்தான் கட்சியை நடத்த வேண்டும், என்னை புறக்கணித்து எம்எல்ஏக்கள் கூட்டம் , சசிகலா முதல்வராக தொண்டர்கள் விரும்பவில்லை,  தன்னந்தனியாக நின்று கடைசி வரை போராடுவேன்,  
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன்,
ஜெயலலிதா சமாதியில் சசிகலாவுக்கு பகிரங்க சவால் 
Read more

Panneerதமிழக சட்டமன்றம் கூடும் போது எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கண்கூடாக தெரியும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு எக்காலத்திலும் நான் துரோகம் இழைக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் கூறும் என்று தெரிவித்தார். Read more

panneerchelvamஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபாவை தன்னுடன் இணைந்து பணியாற்ற தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தான் நான் ஆட்சி செய்தேன். இனியும் என் பாதை அவர் காட்டிய வழியாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார். Read more

kiriyellaமாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதால் மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தினால் கூட மாற்ற முடியாது என அரசாங்கம், நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமையினாலேயே மாணவர்கள்மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, நிலையியற் கட்டளையின்கீழ், நாடாளுமன்றத்தில், நேற்றுக் கேள்வி எழுப்பினார். அக்கேள்விக்கு பதிலளிக்கும்போதே, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, மேற்கண்டவாறு பதிலளித்தார். Read more

kepapulavuமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத நிலையில் அக்கிராம மக்கள் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோருடன் போராட்ட பகுதியிலிருக்கும் அவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு இன்று விஜயம் செய்தனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோரை மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலாளரும் வலியுறுத்தினர். Read more