Header image alt text

fsமுல்லைத்தீவு மூங்கிலாறு தேக்கங்காட்டு பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் சிவில் அலுவலகம் ஒன்று அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னர் விசுவமடு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டபோது பொதுமக்களின் சிவில் சந்திப்புக்காக இந்த தேக்கங்காட்டு இராணுவ அலுவலகம் திறக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் அந்த அலுவலகத்திற்குச் சென்று தமது தேவைகளை பெற்றுக் கொள்ளுதல் மிகக்குறைவாகவே காணப்பட்டதாக கூறப்படுகின்றது. Read more

americaஇருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவின் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்றிரவு 16பேர் கொண்ட குறித்த குழுவினர் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமையவே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதேவேளை, இவர்கள் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர். Read more

ereமத்திய அரசும் மாகாண அரசும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்க கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சத்தியாக்கிரக போராட்டத்திற்கு முன்பாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கடும் வெயிலிலும் பச்சிளங்குழந்தைகளுடன் பட்டதாரி தாய்மாரும் கலந்துகொண்டதுடன் விசேட தேவையுடையவர்களும் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு தமக்கான நியமனங்கள் வழங்குவது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவற்றை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர். Read more

tna (4)இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரிடம் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது கரிசனையையும் எடுத்துரைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கினார். Read more

luvigகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக இன்றுகாலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமால் கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி மாலைமுதல் 17 குடும்பங்கள் முகாமுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. 7 நாட்களாக போராட்டம் தொடர்ந்த போதிலும், மக்களின் காணிகளை விடுவிக்க எந்தவொரு தரப்பினரும் முன்வராததை அடுத்து அப்பகுதி மக்கள் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். Read more

sadaகிழக்கு மாகாணத்தில் ஆசிரிய நியமன பரீட்சையில் சித்தியடைந்தும் தமக்கான நியமனம் வழங்கப்படாததை கண்டித்தும் தமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரியும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று விவேகானந்தா கல்லூரியில் 222 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படுகின்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் நியமனங்களுக்கு பரீட்சை செய்யப்பட்டு சித்தியடைந்த பட்டதாரிகளில் ஒரு பகுதியினரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

ertrtereகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் காலஅவகாசம் வழங்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ertrtrகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண ரீதியாக பாடசாலை மாணவர்கள் இன்றுகாலை 8.00மணி தொடக்கம் 8.30 வரை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கேப்பாபுலவு மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று கோரி இன்று யாழ் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலை மாணவிகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கேப்பாபுலவு மக்களுக்கு எமது ஆதரவு, மக்களின் நிலம் மக்களுக்கே என்னும் கருப்பொருளில் இந்த கவனயீர்ப்பில் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை இன்றையதினம் மாணவர்கள் புதுக்குடியிருப்பில் இராணுவமுகாமிற்கு முன்னாலும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். கேப்பாபுலவில் இன்றோடு 21 நாட்களாக இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

sfsdfdfdfகேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கியுள்ளனர்.

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 20 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை விமானப்படைத்தளத்துக்கு முன்னால் வீதி ஓரத்தில் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். Read more

P1420225யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 17.02.2017 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் யோகதயாளன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ளு.ஓ அன்ரன் (யோக பயிற்சி) அவர்களும், கௌரவ விருந்தினராக வர்த்தகர் பரமேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. Read more