Header image alt text

IMG_9605வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் 12.04.2017அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை வவுனியா இரத்த வங்கியில்  சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. Read more

boomஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதை வளாகத்தில் 9,800 கிலோ எடையுடைய,30 அடி நீளமான மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசி தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more

tamil new yaer01

viyalendranகடந்த வருடத்தில் இருந்த நிலமையை விட ஏவிளம்பி சித்திரை புதுவருடத்திலாவது புலம்பெயர் சமூகம் எமது தமிழ் மக்களின் முழுமையான அபிவிருத்திக்காக முன்வரவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியாளர்களை விட தற்பொழுதுள்ள நல்லாட்சி என்கின்ற ஆட்சியில் ஓரளவு ஊடக சுதந்திரம், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை முன் நின்று கேட்கக்கூடிய சுதந்திரம் உள்ள நிலையில் பெருமளவான மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டனவா என்றால் கேள்விக் குறியாகவே அமைந்துள்ளது. Read more

mohanதமிழர்களின் நிரந்தரமான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர்களின் உண்மை நிலவரம், தமிழர்களின் பூர்வீக நிலங்களின் விடுவிப்பு நோக்கிய பயணத்தில் இவ் வருடம் மலரும் ஹேவிளம்பி புது வருடத்திலாவது எமக்கான தீர்வை நோக்கி பயணித்து மாற்றங்கள் நிகழுமா என எமது மக்களின் அபிலாசைகளின் மாற்றங்களுக்காக நாம் பயணிப்போம். Read more

palamவவுனியா சமனங்குளம் பகுதியில் மழைகாலங்களில் வெள்ளத்தினால் பெரும் இன்னல்களை அப்பகுதி மக்கள் எதிர் நோக்கி வந்தனர். இது தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.      இந்நிலையில் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் நிலமையை விளக்கி வேண்டுகோள் விடுத்ததன் பேரில் வட மாகாண மீன்பிடி வீதி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களின் உத்தரவின் பெயரில் கோவில்குளம் சமனங்குளம் வீதியில் அமைந்துள்ள சமனங்குளம் பாலத்துக்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை நேரில் சென்று திரு.லிங்கநாதன் அவர்கள் பார்வையிட்டார்.

malalaநோபல் பரிசை வென்றுள்ள மலாலா யூசஃப்சாய், மிக இளம் வயதில் ஐ.நாவின் அமைத்திக்கான தூதுவராகியுள்ளார்.தற்போது பிரிட்டனில் ‘ஏ’ லெவல் வகுப்புகளில் இருக்கும் 19 வயதாகும் மலாலாவிற்கு, புகழ்பெற்ற பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது; பெண் கல்வியில் சிறப்பு கவனத்தை செலுத்தும் வகையில் மலாலா அந்த வாய்ப்பை ஏற்கவுள்ளார். Read more

imagesமுல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என கூறியிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்க படையினர் கேட்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் வழங்கும் எனவும் மேலதிக காணி விடுவிப்பு தொடர்பில் 24ம் திகதி பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பனம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறப்பு விழாவுக்காக யாழ்.வந்த அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனிடம் கேப்பாவிலவு மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், கேப்பாபிலவு கிராமத்தில் படையினரிடம் உள்ள 399 ஏக்கர் நிலம் மக்களிடம் வழங்கப்படவுள்ளது. Read more

keppapula02கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து அந்நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றுடன் 43 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி வருகின்றனர்
மேலும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் குறித்த முடிவை அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்க இன்று 11.04.2017 அவர்களை தமது போராட்ட இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். Read more

viyalendranநாங்கள் தீர்வுத் திட்டத்தை நோக்கிப் பயணிக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அதற்கு சமாந்திரமாக யுத்தத்தால் சீரழிந்து போன சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்களும் அபிவிருத்தி நோக்கி சமாந்திரமாக பயணிக்க வேண்டும்.

அபிவிருத்தி என்ற விடயத்திலே நாம் பின்தங்குவோமாக இருந்தால் நமது சமூக இருப்பென்பது கேள்விக்குறியாகி விடும்.
சமூகம் அழிந்த பின்னர் உரிமை கிடைத்து என்ன பிரயோசனம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உபதலைவர் சதாசிவம் வியாழேந்திரன் அவர் கேள்வி எழுப்பினார். Read more