Header image alt text

anpuh chirar ellam02கனடா நாட்டை சேர்ந்த சர்வேஸ்வரன் அனுசியா அவர்களால் தனது பெற்றோரின் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்பு சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகளை, இன்று வட்டுக்கோட்டை  இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

Read more

DPLF Help01adsdsபுலம் பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் மன்னார் பட்டித்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தோம் முதியோர் இல்லத்திற்கு 18,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது .
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அரசியல் பிரிவு) சுவிஸ் கிளைத் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஆதரவு இல்லங்களில் தங்கியுள்ள முதியோர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

uma school 05வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம், கே.தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு வலயம்), எஸ்.இராஜேஸ்வரன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா வடக்கு வலயம்), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் (தலைவர், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்), எஸ்.அருள்வேல்நாயகி (முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்), வி.யோகநாதன் (கிராம சேவையாளர்), இலங்கேஸ்வரன் (பொலிஸ் அதிகாரி), ஐ.விக்னபவானந்தன் (ஜே.பி –செயலாளர் சிவன் கோயில்)ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

varani03யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி முன்பள்ளியின் விளையாட்டு விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் திருமதி பவுந்திகா அல்பிரட் (முன்பள்ளி முகாமைத்துவக் குழு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ந.திருவாசகன் (உதவிக்கல்விப் பணிப்பாளர், தென்மராட்சி), திரு. ரி.ஜெயந்தன் (தாதிய உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு,

Read more

sivapoomi02யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது. 

Read more

seriyaசிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா திடீர ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர், ரஷ;யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வடமேற்கு சிரியாவில் டஜன் கணக்கான பொதுமக்கள் பலியாக காரணமான ரசாயன தாக்குதலை நடத்த இந்த விமானத்தளம் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலடி ஏவுகணைத் தாக்குதல் : Read more

swedenசுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் பாரஊர்தியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் 12 பேர்வரை படுகாயம் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் அல்லது காமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை. Read more

eastகிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் இறக்காமம் இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுவர்கள் , பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், இதுவரையில் 3 மரணங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் கூறுகின்றது. Read more

Thiguvi15திகுவி (THIGUVI) சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பவிழா யாழ்ப்பாணம் ஜெட்விங்க் விடுதியில் இன்று (07.04.2017) முற்பகல் 10மணிமுதல் 11.30மணி வரையில் நடைபெற்றது. மேற்படி நிறுவனத்தின் சர்வதேச இணைப்பாளர் திரு. இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்குநர்கள் செல்வரட்ணம் குணபாலன், விஜய் இரட்ணசபாபதி ஆகியோரும் பங்கேற்றிரந்தனர். இந்நிகழ்வின் விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், டான் தொலைக்காட்சி நிறுவன இயக்குநர் எஸ்.எஸ். குகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Read more

DSC06660முல்லைத்தீவு கருவேலன்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அபிவிருத்திக்கு முன்னோடியானவரையும், பாடசாலையில் விசேட திறமைகளைப் பெற்றிருந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.04.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி யோ.துரைரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.ஜெயபாலன், கோட்டக்கல்வி அதிகாரி க.பங்கஜசெல்வன், கிராம சேவையாளர் திருமதி நீரூஜா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தீபா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more