காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, இறப்புச்சான்றிதழ்கள், நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறையை, காணாமல் போனவர்களை மீட்பதில் காட்டவில்லை என்று, கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்;பட்ட தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி, 44ஆவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தெரிவித்துள்ளனர்.
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உரிய பதிலை, இந்த அரசாங்கம் வழங்கவேண்டும். இரகசிய முகாம்களில் தடுத்து வகைப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்’ எனக்கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 44ஆவது நாளாகவும் தொடர்ந்தது. Read more








