Header image alt text

amachsarவடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளில், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களை விடுமுறையில் அனுப்பும் நிபந்தனையை திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணங்கியுள்ளார்.

இதனை அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று பகல் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். Read more

lonvan1வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேனால் மோதப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பயங்கரவாதம் மீதும் பல ஆண்டுகளாக அதிகப்படியான சகிப்புத்தன்மை காட்டப்பட்டதாகவும். Read more

Untitledதமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more

viki&sambanவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கட்கு எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் அவர்கள் எழுதிய கடிதம். Read more

CV-protestவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (17) முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். Read more

K.Sivanesan Bavanதமிழ்மக்களினது நலன்களையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழரசுக்கட்சி ‘தம்வழி தனிவழி’ என்ற அந்தரங்க செயற்பாட்டை ஊக்குவிக்க முனைகின்றதா? க.சிவநேசன் (பவன்) – வடமாகாணசபை உறுப்பினர் (புளொட்)

வடக்கு மாகாணசபையின், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முற்றிலும் நீதிக்கு புறம்பானதும், தனிப்பட்ட நலன்களை மையப்படுத்தியதும் அனாவசியமானதுமாகும்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின், அதுவும் குறிப்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கு அமையவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகளும் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. Read more

deniswaranவிசாரணையை ஆரம்பித்தது முதல் அதை கொண்டு சென்ற படிகள் உட்பட அனைத்திலும் வடமாகாண முதலமைச்சர் தவறு செய்துள்ளார் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், Read more

sumanthiranவட மாகாண சபையில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் நிலவும் நெருக்கடி தொடர்பாக சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில்
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மகாண சபை உறுப்பினர்கள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ‘ஊழல், பண மோசடி மற்றும் லஞ்சத்துக்கு எதிரான தீவிரமான செயற்பாடே ஆகும். Read more

Untitledகடந்த சில தினங்களாக வடக்கு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கான காரணம் என்ன என்பதை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன்னிலையில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது ஆதரவினை தெரிவித்தனர்.                                          இதன்போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர் Read more