வவுனியா கூமாங்குளத்தில் 20.08.2017 அன்று கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு புஸ்பராஜா அவர்களின் தலைமையில் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது.Posted by plotenewseditor on 21 August 2017
Posted in செய்திகள்
வவுனியா கூமாங்குளத்தில் 20.08.2017 அன்று கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு புஸ்பராஜா அவர்களின் தலைமையில் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது.Posted by plotenewseditor on 20 August 2017
Posted in செய்திகள்
வட மாகாணசபை அமைச்சராக பதவிவேற்றிருக்கும் கௌரவ அனந்தி சசிதரனுக்கான பாராட்டு விழா நிகழ்வானது இன்று யாழ். மல்லாகத்தில்இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் மற்றும் ஊர்ப் பெரியார்களும், கிராம மக்களுமாக பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். Read more
Posted by plotenewseditor on 20 August 2017
Posted in செய்திகள்
டான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்ச்சியில் ஈழத்து அரசியல் பிரச்சினைகளும், புலம்பெயர் தமிழர்களும் என்ற தலைப்பில் 18.08.2017 வெள்ளிக்கிழமை அன்று
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு. எஸ்.ஜெகநாதன் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
https://www.facebook.com/askmediadannews/videos/1453175651440082/ Read more
Posted by plotenewseditor on 20 August 2017
Posted in செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று வெளிநாடு செல்லும் சகல இலங்கையர்களும் பதிவு கட்டணம் செலுத்துவது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
பணிபுரிவதற்காக நாட்டை விட்டு வெளியேறுமுன் இந்த கட்டணம் செலுத்தப்பட வேண்டும். 1985ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கட்டளைச் சட்டத்தின் 51ஆம் பிரிவிற்கும் அதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 56ஆவது பிரிவிற்கும் அமைய பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என பணியகத்தின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 August 2017
Posted in செய்திகள்
இலங்கை பூராகவும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்றுகாலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.15 வரை இடம்பெற்றது. சுமார் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றினர்.
இவர்களில் 562 மாணவர்கள் விஷேட தேவையுடயவர்களாவர். புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருந்ததுடன், இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணி நேரமும் 15 நிமிடங்களையும் கொண்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 20 August 2017
Posted in செய்திகள்
மீண்டும் பணிக்கு திரும்பாதிருந்த 4300ற்கும் அதிகமான இராணுவத்தினர் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 777 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன கூறினார். அதன்படி தற்போது வரை சேவையில் இருந்து தப்பிச் சென்றிருந்த 4377 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முப்படைகளையும் சேர்ந்த 5000 இற்கும் அதுகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 20 August 2017
Posted in செய்திகள்
கனடாவில் வசிக்கும் பகீரதன் சுதாஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வி இலக்கியா அவர்களுடைய பூப்புனித நீராட்டு விழாவினை முன்னிட்டு நேற்றையதினம் (19.08.2017) தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் வவுனியா மணிப்புரம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more
Posted by plotenewseditor on 20 August 2017
Posted in செய்திகள்
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் அமைதிபுரம் பாடசாலை மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
எமது புலம்பெயர் உறவான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த திரு.திருமதி. கிருபா வசந்தி தம்பதிகளின் புதல்வியான வைசாலியின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதி அன்பளிப்பின்மூலம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் நேற்று துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அமைதிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 61 மாணவர்களுக்கு ரூபா 40,000 பெறுமதியான மழைக்கவசங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 19 August 2017
Posted in செய்திகள்
மட்டக்களப்பு, சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின், 27ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான சுற்றிவனைப்புகள் நடந்துகொண்டிருந்த வேளையில் வாழைச்சேனை, பேத்தாளை, முறாவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் அபாயத்தை எதிர்நோக்கினர். Read more
Posted by plotenewseditor on 19 August 2017
Posted in செய்திகள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எஸ்.ஆர் நாககமுல்ல உள்ளிட்ட 08 பேருக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எச். ஆர். ரவி பீரிஸ், எம்.ஏ.ஈ. மகேந்திர, பி.சி. டி சில்வா, ஜே.ஐ.டி.ஏ. குணதிலக, டி.ஜே. பலிஹக்கார, எஸ்.பி. கலப்பத்தி, டி.எம்.டி.ஜே பிரியலால் ஆகியோருக்கே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.