Header image alt text

electricity board3 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து, நாளை நண்பகல் 12 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், “வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் 48 மணித்தியாலங்களுக்குள் எமக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின், எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

seyed rad al hussainகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹ_ஸைன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. அதன்போது, தனது வாய்மூல அறிக்கையை, உயர்ஸ்தானிகர் வழங்கினார். ஒவ்வொரு நாடு பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்திய அவர், இலங்கை சம்பந்தமாகவும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார். Read more

sdபுதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக் கடிதங்களைக் கையளித்துள்ளனர். எஸ்டோனியா குடியரசு, பெரு குடியரசு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களே ஜனாதிபதியை சந்தித்து நியமனக் கடிதங்களை ஒப்படைத்துள்ளனர்.

நட்புறவுள்ள நாடுகளுக்கு இடையே பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதன் ஊடாக நட்புறவை மேலும் பலப்படுத்த முடியும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

UN commonஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தொடரில், இலங்கையின் விவகாரங்கள், நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

bavanதேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி ஒருவார காலம் அனுஸ்டிக்கப்படவிருக்கும் நிலையிலும், இதனையொட்டி எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறவிருக்கும் நிலையிலும், மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுபிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ஹரிசன் உள்ளிட்டவர்களும், மாகாண அமைச்சர்களில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் தவிர்ந்த ஏனைய அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

western pc20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று மேல் மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமூலத்திற்கு ஆதரவாக 45 வாக்குகளும் எதிராக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், நால்வர் வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

EPCஇலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, எதிராக 8 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

diran sdfsdபர்பேசுவல் ட்ரேசரிங் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ_க்கு, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை வாக்குமூலமளிக்க அவர் ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும். இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஒரு மாதங்களுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16ம் திகதி முதல் ஒக்டோபர் 16ம் திகதிவரை அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும், நீதிபதி உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

kekaliyaஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட தொலைபேசியின் மாதாந்தக் கட்டணத்தை செலுத்த, அரச அச்சக கூட்டுத்தபானத்தின் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. Read more

dead.bodyமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றுகாலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கோவில்போரதீவு முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றுமாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார். Read more